164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 35000 கிளர்ச்சியாளர்கள் கொல்லபபட்டுள்ளதாக ரஸ்யா அறிவித்துள்ளது. ரஸ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் Sergei Shoigu இதனைத் தெரிவித்துள்ளார். ரஸ்யாவின் இராணுவ வெற்றிகள் தொடர்பில் உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ள அவர் ரஸ்யாவின் தலையீடு சிரியாவின் வீழ்ச்சியை தடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரஸ்யா மிகவும் வலுவான நிலையில் காணப்படுவதாகவும் எந்தவொரு நாட்டுக்கும் ரஸ்யா இரண்டாம் பட்சமில்லை எனவும் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
Spread the love