குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சுனில் ஹந்துனெத்தியின் கடிதம் பிழையானது என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. கோப் குழுவின் தலைவர் ஹந்துனெத்தி நேற்றைய தினம் சபாநாயகருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தார் எனவும் அந்த கடிதத்தில் பிழையான தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன எனவும் தெரிவித்துள்ளது.
கோப்குழு அறிக்கையை சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைப்பதாக துறைசார் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கருஜயசூரியவிற்கு வாய்மொழி மூலம் அறிவித்தார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து பிரதமர் பாராளுமன்றிற்கும் அறிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் அலுவலகம் எனினும் சுனில் ஹந்துனெத்தி அனுப்பியுள்ள கடிதத்தில் பிழையான தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.