தமிழகத்தின் தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட ராம்மோகன் ராவின் மகன் விவேக்கை இன்று மாலை நேரில் வந்து விளக்கம்ளிக்க வேண்டுமென வருமானவரித் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
கோடிக் கணக்கில் கறுப்புப் பணத்தையும், தங்கக் கட்டிகளையும் பதுக்கி வைத்திருந்த சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் அடிப்படையில், தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இருந்த ராம்மோகன் ராவ் வீடு, அலுவலகம், உட்பட 13 இடங்களில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனை நடத்திய வேளை பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவை நேரில் அழைத்து விசாரிக்க அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது. இன்றே அந்த விசாரணை ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் ராம்மோகன் ராவ் மகன் விவேக்கிற்கு வருமானவரித் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது. அதில் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்தில் நேரில் வந்து விவேக் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.