ஹற்றன் காவல்துறை பிரிவிற்குட்பட்ட டிக்கோயா நகரப்பகுதிக்கு குடிநீர் வழங்கும் சிங்கமலை பாதுகாப்பு வனப்பிரதேசத்தில் நேற்று மாலை ஏற்பட்ட தீயினால் பல ஏக்கர்கள் நிலம் எரிந்து நாசமாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மத்திய மாகாணத்தில் தற்போது வறட்சியான காலநிலை காணப்படுவதனால் தீ வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தீயினால் சிங்கமலைப் பகுதியில் காணப்படும் அரிய வகை தாவரங்கள், விலங்குகள் அழிக்கப்பட்டு இருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை தீயினால் நீரூற்றுக்கள் அற்றுப் போவதனால் எதிர்காலத்தில் குடிநீர்ப்பஞ்சம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இத்தீயானது காட்டுமிருகங்களை வேட்டையாடுவதற்கு வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.