Home இலங்கை விசேட அபிவிருத்தி நியமம் குறித்த சட்ட மூலம் வடமாகாண சபையினால் நிராகரிப்பு

விசேட அபிவிருத்தி நியமம் குறித்த சட்ட மூலம் வடமாகாண சபையினால் நிராகரிப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


அரசாங்கத்தினால் சமர்பிக்கப்பட்ட விசேட  அபிவிருத்தி நியமம் குறித்த சட்ட மூலம் வடமாகாண சபையினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.  வடமாகாண சபையின் அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக குறித்த சட்டமூலத்தை நிராகரித்ததாக  தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த   விசேட  அபிவிருத்தி நியமம் குறித்த ஒழுங்கு சட்டமூலம் தொடர்பில் தெளிவுபடுத்தும் முகமாக விசேட சந்திப்பு ஒன்று  அனைத்து மாகாண முதலமைச்சர்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இன்றையதினம் இடம்பெறவுள்ள நிலையில்  தனக்கு அழைப்பு கிடைக்காதமையினால் தான் இந்த சந்திப்பில் கலந்துக் கொள்ளப்போவதில்லை என வடமாகாண முதலமைச்சர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More