118 பயணிகளுடன் லிபியாவில் இருந்து புறப்பட்ட விமானத்தை கடத்தி மால்டாவிற்கு திருப்பிய நபர்கள் பயணிகளை விடுவித்ததுவிட்டு காவல்துறையில் சரண் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், அதில் பயணம் செய்த இரண்டு நபர்கள் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகத் தெரிவித்த நபர்கள் விமானத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர்.
மால்டா விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டதுடன் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டிருந்த விமானத்தை; சுற்றி படையினர் தயார் நிலையில் இருந்த நிலையில் கடத்தல் காரர்கள் விமானத்தில் இருந்து பயணிகளை இறங்குவதற்கு அனுமதித்துள்ளனர்.
பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் அனைவரும் வெளியேறியதன்பின்னர் கடத்தல்காரர்களும் விமானத்தில் இருந்து இறங்கி சரண் அடைந்ததாகவும் அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், விமானத்தைக் கடத்தியவர்கள் மால்டாவில் அடைக்கலம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களில் ஒருவர் லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபியின் ஆதரவு கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர் எனவும் தகவல்கள் தெரிவின்றன.
இணைப்பு2 – கடத்தப்பட்ட லிபிய விமானத்திலிருந்து பயணிகள் சிலர் வெளியேற அனுமதி
லிபியாவில் இருந்து 118 பேருடன் கடத்தப்பட்ட விமானம், தற்போது மால்டா விான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் சில பயணிகள் வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் கடத்தல்காரர்கள் எத்தனைபேர் என்பது குறித்த தகவல்கள் வெளியதாகவில்லை.
மால்டா நாட்டின் அதிகாரிகள் விமானியின் அறையுடன் தொடர்பு கொண்டு பேசியபோது, சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், பயணிகள் வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்ட போதும் அந்தக் கோரிக்கைகள் என்ன, அவை நிறைவேற்றப்பட்டதா என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
லிபியா பயணிகள் விமானம் 118 பேருடன் கடத்தல்
Dec 23, 2016 @ 17:37
லிபியா பயணிகள் விமானம் 118 பேருடன் மால்டாவில் கட்டாயமாகத் தரையிறக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அது கடத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக மால்டா பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஏர்பஸ் ஏ 320 விமானம், லிபியாவுக்குள் பறந்து கொண்டிருந்தது. ஆஃப்ரிகியா ஏர்வேஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம், நடுவழியில் திசை மாற்றப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விமானத்தை குண்டு வைத்துத் தகர்த்து விடுவதாக மிரட்டி, இரண்டு கடத்தல்காரர்கள் அந்த விமானத்தைக் கடத்தியிருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மால்டா பிரதமர் ஜோசப் மஸ்கட் தெரிவித்தார். விமான நிலையத்தில் சட்டவிரோத இடையூறு ஏற்பட்டிருப்பதாக மால்டா சர்வதேச விமான நிலையம், ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது. அவசர கால படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் பெருமளவிலான சிறப்பு படையினரைக் காண முடிவதாக அங்குள்ள ராய்டர்ஸ் செய்தி முகமையின் புகைப்படைக் கலைஞர் டரின் ஜமிட் லுபி தெரிவித்துள்ளார். மால்டாவுக்கான சில விமானங்கள் இத்தாலியத் தீவான சிசிலிக்குத் திருப்பிவிடப்பட்டுள்ளன.
BBC