குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பொதுமன்னிப்புக் காலத்தில் 4,441 படையினர் முறையாக விலகிக் கொண்டுள்ளனர். உயர் அதிகாரிகள் 20 பேரும் ஏனைய பதவிகளை வகித்த 4421 உத்தியோகத்தர்களும் முறையாக விலகிக்கொண்டுள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 1ம் திகதி தொடக்கம் 31ம் திகதி வரையில் இந்த பொதுமன்னிப்புக் காலம் அமுல்படுத்தப்படுகின்றது.
இந்தக் காலப்பகுதியில் அதிகளவில் இராணுவப் படையினரே முறையாக பதவி விலகிக் கொண்டுள்ளனர் எனவும் சட்ட விரோதமான முறையில் விடுமுறை பெற்றுக்கொண்டவர்களே அதிகளவில் இவ்வாறு பதவி விலகிக் கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது