168
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் மேலும் தகவல்கள் கிடைத்துள்ளன. எக்னெலிகொடவை முதல் தடவை கடத்தியவர்களே மீளவும் அவரை கடத்தியிருக்க வேண்டுமென அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.
2009ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 27ம் திகதி எக்னெலிகொட கடத்தப்பட்டு தாக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார். பின்னர் 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் திகதி மீளவும் கடத்தப்பட்டிருந்தார்.
2009ம் ஆண்டில் கடத்தியவர்களே மீளவும் 2010ம் ஆண்டில் கடத்தியிருப்பார்கள் என விசாரணையாளர்களும் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
Spread the love