குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காணாமல் போன ரஸ்ய இராணுவ விமானம் கருங்கடலுக்கு அருகாமையில் அமைந்துள்ள சொச்சி கடலோர பகுதியில் விழுந்து நொருங்கியுள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்கும் நோக்குடன் உலங்குவானூர்தி மூலம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது விமானம் விழுந்து நொருங்கியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிதறி கிடக்கும் பாகங்களை வைத்து அந்த இடத்தை அடையாளம் கண்டுள்ளதாகவும் மீட்புகள் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ரஸ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஸ்யாவில் ராணுவ விமானம் ஒன்று காணாமல் போயுள்ளது
Dec 25, 2016 @ 10:59
ரஸ்ய இராணுவ விமானமொன்றை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. ரஸ்ய விமானத்தின் ராடார் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கருங்கடலுக்கு அருகாமையில் அமைந்துள்ள சொச்சியிலிருந்து யிலிருந்து புறப்பட்டுச் சில நிமிடங்களில் இவ்வாறு விமானம் மாயமாகியுள்ளது.
TU-154 ரக விமானமே காணாமல் போயுள்ளதாக ரஸ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
சிரியாவின் லாடாகீயா மாகாணத்திற்கு புறப்பட்டுச் சென்ற போது விபத்துக்குள்ளானதாக உத்தியோகப் பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விமானத்தில் 83 பயணிகளும் 8 சிற்பந்திகளும் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விமானத்தை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக ரஸ்ய அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.