158
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மொசூல் நகரை மீளக் கைப்பற்றுவதற்கு ஈராக்கிய படையினருக்கு அமெரிக்கா உதவிகளை வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐ.எஸ் தீவிரவாதிகளினால் கைப்பற்றப்பட்டுள்ள மொசூல் நகரை மீளக் கைப்பற்றும் முயற்சிகளில் ஈராக்கிய படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த முயற்சிகளுக்கு அமெரிக்கப்படையினர் ஒத்துழைப்பு வழங்குவர் என அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஈராக்கில் சுமார் 5000த்திற்கும் மேற்பட்ட அமெரிக்கப் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மொசூல் நகரின் கால்வாசிப் பகுதியை ஈராக்கிய படையினர் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love