தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ரோசய்யாவிடம் விசாரணை நடத்த மத்திய புலனாய்வு துறையினர் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வருமான வரித்துறை அதிகாரிகள் பணம் , நகைகள் மற்றும் பல கோடி சொத்துக்கள் குறித்த ஆவணங்களை பறிமுதல் செய்யப்பட்டு பதவி விலக்கப்பட்ட ராமமோகன ராவை தலைமைச் செயலாளராக நியமிக்கலாம் என மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குப் ரோசய்யாதான் பரிந்துரை செய்தவர் என்றதன் அடிப்படையில் விசாரணை நடத்தத் தேவையான நடவடிக்கைகளை வருமான வரித்துறையினர் முடுக்கி விட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் ரோசய்யாவிடம் எந்த அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை எனவும் இதுதொடர்பான பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.