138
வவுனியா – நீலியாமோட்டைப் பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒருதொகை ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வன்னி விமானப் படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, விமானப் படையினர் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இதன்போது மிதிவெடிகள் 49, கைக்குண்டுகள் மற்றும் 60 மில்லிமீட்டர் மோட்டர் குண்டுகள் போன்ற பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் குறித்த ஆயுதங்களை செயழிழக்கச் செய்துள்ளனர்.
Spread the love