குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவின் பதிய ஜனாதிபதி டொனால்ட் டராம்ப் தனது அறக்கட்டளையை கலைப்பதற்கு தீர்மானித்துள்ளார். டொனால்ட் ட்ராம்ப் அறக்கட்டளை சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எப்போது குறித்த அறக்கட்டளை கலைக்கப்படும் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. எதிர்காலத்தில் எழக்கூடிய சர்ச்சைகளை கலைவதற்கு அறக்கட்டளையை கலைக்குமாறு டொனால்ட் ட்ராம்ப் தமது சட்டத்தரணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 20ம் திகதி ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்து கொள்ள உள்ள ட்ராம்ப் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.