குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடி யாது என ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இதனைத் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக முன்வைக்கப்படும் தீர்வு வடக்கு, கிழக்கை இணைக்கும் இனவாத தீர்வாக அமையக்கூடாது என குறிப்பிட்டுள்ள அவர் 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சர்வாதிகார அரசியல் சாசனத்தை மாற்றி அமைப்பதற்கே மக்கள் இந்த அரசுக்கு ஆணை வழங்கினர்களே தவிர மற்றுமொரு சர்வாதிகார அரசியல் அமைப்பினை உருவாக்கக் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.
இனப் பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சியில் புதிய பிரச்சினைகள் ஏற்படுத்தப்படக் கூடாது என்பதே கட்சியின் நிலைப்பாடு எனவும் ஒட்டு மொத்த மக்களையும், இனங்களையும் நாட்டையும் கருத்திற் கொண்டு அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, தெற்கு மக்களுக்கு இடையில் இன ஒற்றுமையைக் கட்டியெழுப்பக்கூடிய வகையில் புதிய அரசியல் அமைப்பினூடாக தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.