குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எல்லை நிர்ணய அறிக்கையை இன்றைய தினம் சமர்ப்பிக்க முடியாது எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் அசோக பீரிஸ் தெரிவித்துள்ளார். சில மாவட்டங்களின் தமிழ் மொழி பெயர்ப்புக்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத காரணத்தினால் இன்றைய தினம் அறிக்கையை சமர்ப்பிக்க முடியவில்லை எனவும் எல்லை நிர்ணய அறிக்கையை வழங்குவதற்கு இன்னும் சில தினங்கள் தேவைப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எல்லை நிர்ணய அறிக்கையை சமர்ப்பிக்க பிரதமரிடம் திகதி ஒன்றை ஒதுக்கித் தருமாறு ஆணைக்குழு கோரியுள்ளது.பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் தினமொன்றில் இதற்கான ஒழுங்கினை செய்து தர முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எல்லை நிர்ணய அறிக்கை இன்று ஒப்படைக்கப்பட உள்ளது
Dec 27, 2016 @ 07:35
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான எல்லை நிர்ணய அறிக்கை இன்று ஒப்படைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தயாரிக்கும் பணிகள் நேற்று பூர்த்தியாகியுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் அசோக பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் அமைச்சர் அவசரமாக வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொண்டுள்ள காரணத்தினால், அமைச்சின் செயலாளரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர் எல்லை நிர்ணயம் பற்றிய விடயங்களை உள்ளடக்கி வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட உள்ளது. எல்லை நிர்ண அறிக்கை வெளியிடுவதில் கால தாமதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.