175
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
டமாஸ்கஸில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 14 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிரிய ஜனாதிபதி பசர் அல் அசாட்டின் இராணுவத்தினர், கிளர்ச்சியாளர்கள் மீது நடத்தியுள்ள இந்த தாக்குதல் சம்பவத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். குறைந்தபட்சம் 14 பொதுமக்கள்; கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பரல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரச படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதல்களில் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love