தமிழ்நாடு திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்து வரும் எமது உறவுகளிடம் இரக்கம் காட்டுங்கள் என அவா்களது பெற்றோா்களும், மனைவிமாரும் இன்று 27-12-2016 கிளிநொச்சியில் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
காலை பதிரிகையாளா்களை சந்தித்த திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருக்கும் பத்து போ் மற்றும் மண்டபம் முகாமில் இருக்கும் ஒரு பெண் ஆகியோரின் உறவுகள் கிளிநொச்சியில் பத்திரிகையாளா்களை சந்தித்து மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளனா்.
தனது மூத்த மகனை இறுதி யுத்தத்தில் பலிகொடுத்துள்ள நிலையில் தற்போது இருக்கின்ற ஒரு மகன் தமிழ்நாடு சென்ற நிலையில் அங்கு வைத்து கைது செய்யப்பட்டு தற்போது திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளாா்.அங்கு அவா்களை அடித்து துன்புறுத்துகின்றனா். சட்ட ரீதியாக விசா எடுத்து சுற்றுலாவுக்குச் சென்ற மகனை சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல வந்துள்ளதாக கூறி அதற்கு ஒப்பம் இடுமாறு தொடா்ந்தும் துன்புறுத்தி வருகின்றனா்.
யுத்தகாலத்தில் மிகமோசமாக மன உளைச்சலுக்கும், பாதிப்புக்களுக்கும் முகம் கொடுத்த எங்களுக்கு எங்களுது பிள்ளைகள் உண்ணாவிரதம் இருந்து வருவதான செய்தி மேலும் எங்களை மனதளவில் பாதித்துள்ளது. எனவே அவா்கள் சில வேளை ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் அதனை மனித்து தயவு செய்து விடுதலை செய்யுங்கள் என திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைத்திருக்கும் ஈழத்தமிழா்கள் பத்து பேரில் ஒருவரின் தந்தையான உமாகாந்தன் தெரிவித்துள்ளாா்.
தான் இரண்டு குழந்தைகளுடன் மிகவும் நெருக்கடியான சூழலில் வாழ்ந்து வருகின்றேன். எனது கணவா் கைது செய்யப்படும் இரண்டாவது குழந்தை ஏழு மாதம் வயிற்றில் தற்போது எனது குழந்தைக்கு அப்பாவின் முகம் தொியாது மூத்த மகள் நான்கு வயது நாளாந்தம் அப்பா எங்கே என்று கேட்டுக்கொண்டே இருக்கின்றாா் எனது தயவு செய்து எனது பிள்ளைகளுக்காக எனது கணவரை விடுதலை செய்யுங்கள் என அழுதழுது கேட்டுக்கொண்டாா்.
இதேவேளை தனது அப்பாவை தன்னுடன் சோ்த்து வைக்குமாறு நான்கு வயது பெண் குழந்தை அழுதவாறு கேட்டுக்கொண்டமை மனதை நெகிழ வைத்த சம்பவமாக காணப்பட்டது.
ஈழத் தமிழர்களின் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது:-
தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி திருச்சி விசேட தடுப்பு முகாமில் கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஈழத் தமிழர்கள், அதிகாரிகளின் உறுதிமொழியை அடுத்து தமது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர்.
சுற்றுலா வீசாவின் இந்தியா சென்றிருந்த இவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்தனர் என்ற குற்றச்சாட்டில் கியூ பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
எனினும், ஆலய தரிசனத்திற்கான சென்றிருந்த தம்மை கைதுசெய்து பொய் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதாக தெரிவித்துள்ள ஈழத் தமிழர்கள் தம்மை விடுவிக்குமாறு வலியுறுத்தியே குறித்த உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.
இவர்களுள் இருவரின் நிலை நேற்று கவலைக்கிடமாக காணப்பட்டபோது அவர்கள் மருத்துவ உதவியையும் நிராகரித்து வந்தனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஈழத்தமிழர்களுடன் மாவட்ட தனித்துணை ஆட்சியாளர் நடராஜனும் திருச்சி மாநாகர சட்ட ஒழுங்கு துணை பொலிஸ் ஆணையாளர் வீ.மந்திரமூர்த்தியும் நேற்று இரவு நடத்திய பேச்சுவார்த்தையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கைகளுக்கு சாதகமான பதிலை பெற்றுத்தருவதாக வழங்கிய உறுதிமொழியை அடுத்து குறித்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.