155
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அபிவிருத்தி விசேட ஒழுங்கு உத்தேச சட்டத்திற்கு தென் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு மாகாணசபைகளும் இது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
தென் மாகாணசபையில் இந்த உத்தேச சட்டம் 17 மேலதிக வாக்குகளினாலும் சபரகமுவ மாகாண சபையில் இந்த உத்தேச சட்டம் 7 மேலதிக வாக்குகளினாலும் தோற்கடிக்கப்பட்டுள்ளன. வட மாகாணசபை மற்றும் வடமத்திய மாகாணசபைகள் ஆகியன இந்த உத்தேச சட்டத்தை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love