195
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாகாணசபைகளின் அதிகாரங்கள் பறிக்கப்படாது என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அபிவிருத்தி விசேட நியம சட்ட மூலத்தின் ஊடாக மாகாணசபைகளின் அதிகாரங்கள் குறைக்கப்படாது எனவும், அதிகாரங்கள் ஒரு அமைச்சரின் கீழ் கொண்டு வரப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதான கட்சிகளுக்கு இடையில் எவ்வாறான முரண்பாடுகள் ஏற்பட்டாலும் தேசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கில் ஒன்றிணைந்து செயற்பட உள்ளதாகத் தெரி;வித்துள்ளார்.
Spread the love