இந்தியாவில் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறும் 20,000 தொண்டு நிறுவங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. முறையான ஆவணங்கள் இல்லாததால் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு வெளி நாடுகளிடமிருந்து நிதியுதவி பெறும் தொண்டு நிறுவனங்கள் ஜூன் மாதத்துக்குள் தங்களின் உரிமங்களை புதுப்பித்திருக்க வேண்டும். எனினும் அவகாசம் கொடுத்தும் இதுவரை புதுப்பிக்கப்படாமல் இருந்த தொண்டு நிறுவனங்களின் உரிமங்களையே இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது.
கடந்த நவம்பர் 4 ஆம் திகதியும் இதேபோன்று புதுப்பிக்கப்படாத 11,319 தொண்டு நிறுவனங்களின் உரிமங்கள் மத்திய அரசினால் ரத்து செய்ய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.