139
ஐ.நா. சபையின் தடையை மீறி கிழக்கு ஜெருசலேம் பகுதியில் புதி தாக 5 ஆயிரத்து 600 வீடுகளை கட்ட இஸ்ரேல் அரசு முடிவு செய்துள்ளது.
இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றிய பாலஸ்தீன பகுதிகளில் யூத குடியிருப்புகளைக் கட்டக்கூடாது என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எனினும் ஐ.நா. தீர்மானத்துக்கு கட்டுப்பட மாட்டோம் என அறிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கிழக்கு ஜெருசலேம் பகுதிகளில் புதிதாக 5,600 வீடுகளைக் கட்டுவதற்கு விரைவில் அனுமதி வழங்க இருப்பதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Spread the love