தந்தையை இழந்த 700-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரியான மகேஷ் சவானி என்பவர் திருமணம் செய்து வைத்திருக்கிறார். கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் தந்தையை இழந்த 236 பெண்களுக்கு தனது சொந்த செலவில் செய்து வைத்த திருமணத்தில் சுமார் ஐம்பதாயிரம் பேர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர்.
திருமணத்தின் போது சீர்வரிசையாக 5லட்சம் ரூபா பெறுமதியில் கட்டில் சோபா உட்பட வீட:டுக்கு தெவையான பொருட்களையும் வழங்கியுள்ளார். கடந்த 2008-ம் ஆண்டு தன்னிடம் வேலை செய்த ஒருவர் அவரின் மகள் திருமணத்துக்கு சிலநாட்களுக்கு முனனர்; இறந்து விட்டதிலிருந்து இதுபோல தந்தையை இழந்த பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுவரை தந்தையை இழந்த சுமார் 700-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தனது செலவில் திருமணம் செய்து வைத்திருப்பதாகவும் அவர்கள் அனைவரும் தன்னை அப்பா என்றே அழைக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தந்தைமாரை இழந்த 700 மகள்மாருக்கு சீர்வரிசையுடன் மணம் முடித்து வைத்த அப்பா
186
Spread the love