குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
அமைச்சரின் நடவடிக்கையினால் அரிசி விலை உயர்வடைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார். கிராமிய பொருளாதார அமைச்சர் பீ. ஹரிசனின் நடவடிக்கைகளே இன்று அரிசி விலை உயர்வடையக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திடம் காணப்படும் நெல் உரிய முறையில் விநியோகம் செய்யப்படாமையே அரிசி விலை உயர்வடையக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு சொந்தமான நெல்லை சந்தைக்கு விநியோகம் செய்யுமாறு ஜனாதிபதியும் பிரதமரும் தீர்மானித்துள்ள நிலையில் அமைச்சர் அதனை உரிய முறையில் செய்யத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரிசி ஆலை உரிமையாளர்களிடம் சம்பா மற்றும் கீரி சம்பா போன்ற அரிசி வகைகள் கையிருப்பில் உள்ளதாகவும், நாடு அரிசி கையிருப்பு கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.