167
இந்தியாவின் உத்தர பிரதேசத்தின் கான்பூரில் இன்று அதிகாலை புகையிரதம் ஒன்று தடம்புரண்டதில் இருவர் உயிரிழந்ததுடன் 26 பேர் காயமடைந்துள்ளனர். கான்பூரில் உள்ள ரூரா பகுதி அருகே சென்று கொண்டிருந்தவேளை புகையிரதத்தின்; 14 பெட்டிகள் தடம் புரண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து இடம்பெற்ற இடத்துக்கு சென்ற மீட்புக்குழுக்களை காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் .
கடந்த மாதம் 21ம் திகதி இந்தூர்-பாட்னா கடுகதி புகையிரதம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 150 பேர் பலியாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love