எதிர்வரும் மார்ச் 31ம் திகதிக்கு பின்னர் பழைய 500, 1000 ரூபாய் தாள்கள் வைத்திருந்தால், சிறைத்தண்டனை இல்லை என இந்திய மத்திய அரசின் அவசர சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது
மார்ச் 31ம் திகதிக்கு பின்னர் பழைய 500, 1000 ரூபாய் தாள்கள் வைத்திருந்தால், அபராதம் விதிக்கப்படுவதுடன் நான்கு வருடங்கள்; சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்ற அவசர சட்டத்துக்கு இந்திய மத்திய அமைச்சரவை நேற்றைய தினம் அனுமதி வழங்கியிருந்தது.
தற்பொழுது சிறைத்தண்டனை இல்லை என மத்திய அரசு அவசர சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளதுடன் அபராதத்தொகையையும் குறைந்த பட்சம் 10,000 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட அவசர சட்டம் விரைவில் குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படவுள்ளது.
இந்தியாவில் மார்ச் 31க்குப் பின்னர் பழைய 500, 1000 ரூபாய் தாள்கள் வைத்திருந்தால் அபராதம் :
Dec 28, 2016 @ 11:06
எதிர்வரும் மார்ச் 31ம் திகதிக்கு பின்னர் பழைய 500, 1000 ரூபாய் தாள்கள் வைத்திருந்தால், அபராதம் விதிக்கப்படும் என்ற அவசர சட்டத்துக்கு இந்திய மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
டிசம்பர் 30ம் திகதிவரை அனைத்து வங்கிகளிலும் பழைய ரூபாய் தாள்களைக் கொடுத்து புதிய ரூபாய் தாள்களாக மாற்றிக்கொள்ளலாம் என இந்திய மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
எனவே மார்ச் 31ம் திகதிக்கு பின்னர் பழைய 500, 1000 ரூபாய் தாள்கள் வைத்திருந்தால், அபராதம் விதிக்கப்படும் என்ற அவசர சட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில் மார்ச் 31 வரை தங்களிடமுள்ள பழைய ரூபாய் தாள்களை ரிசேர்வ் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.