குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரஸ்யாவில் ஊக்க மருந்து சூழ்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் தடiவாயக ரஸ்ய அதிகாரிகள் ஊக்க மருந்து பயன்பாடு குறித்த மோசடிகள் குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளனர்.இது தொடர்பில் நியூயோர்க் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. போலியாக ஊக்க மருந்து வழங்கப்பட்டதன் ஊடாக ஆயிரம் ரஸ்ய விளையாட்டு வீர வீராங்கனைகள் நன்மை பெற்றுக்கொண்டதாக அண்மையில் மெக்லாரன் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
குறிப்பாக திட்டமிட்ட அடிப்படையில் நிறுவன ரீதியில் இவ்வாறு மோசடிகள் செய்யப்படுவதாக, ரஸ்ய ஊக்க மருந்து முகவர் நிறுவனத்தின் பதில் பணிப்பாளர்Anna Antseliovich தெரிவித்துள்ளார் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது. எனினும் இந்த தகவல் பொய்யானது எனவும், பணிப்பாளரின் கருத்துக்கள் ஊடகத்தில் திரிபு படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாகவும் ரஸ்யா குறிப்பிட்டுள்ளது.