குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
விமர்சனங்களைத் தாண்டி மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமென காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். மக்களின் இதயங்களை வென்றெடுப்பதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
மக்களினால் காவல்துறையினர் விமர்சிக்கப்பட்ட போதிலும் அவர்களின் இதயங்களை வென்றெடுக்க வேண்டியது அனைத்து உத்தியோகத்தர்களினதும் கடமையாகும் என கண்களில் கண்ணீர் மல்க இந்த உருக்கமான வேண்டுகோளை காவல்துறை மா அதிபர் விடுத்துள்ளார்.
காவல்துறை உத்தியோகத்தர்கள் கோபப்படக் கூடாது எனவும் மக்களை பழிவாங்கக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் யுத்தமோ கடும்போக்குவாதமோ கிடையாது எனவும் மக்களுக்கு வேண்டிய பூரண சுதந்திரம் தற்போது காணப்படுவதாகவும் அதனை காவல்துறையினரே வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டு மக்கள் தம்முடன் இருப்பதாகவும் மக்களின் இதயங்களை வென்றெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.