144
ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் இலங்கைக்கும், சீன நிறுவனத்துக்கும் இடையில் கைச்சாத்திடப்பட உள்ளதாகக் கூறப்படும் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு வெளியிடப்படவுள்ளது.
இதன்படி ஜனவரி 02ம் திகதி முதல், அகில இலங்கை துறைமுக ஊழியர்கள் சங்கம், பாரிய எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
குறிப்பாக கறுப்புப்பட்டி அணிந்து கடமைக்கு சமூகமளிக்கவுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் சந்திரசிறி மஹகமகே, குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் வாகனங்களிலும் கறுப்புக் கொடிகளை ஏற்றவுள்ளதாகவும், கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love