குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அடுத்த ஆண்டு அரசாங்கம் கவிழ்க்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2017ம் ஆண்டில் இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதே தமது நோக்கம் எனவும் தற்போதைய அரசாங்கத்திற்கு பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் காணப்பட்டாலும் எதிர்காலத்தில் இந்த அனைத்தும் மாற்றம் பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இரண்டு தடவைக்கு மேல் ஆட்சி செய்ய முடியாது என்பது உண்மை என்ற போதிலும் நாட்டின் அரச தலைவராக இல்லாமலும் இந்த நாட்டை ஆட்சி செய்ய தம்மால் முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியல் சாசனம் தொடர்பில் தற்போதைக்கு கருத்து வெளியிட முடியாது எனவும், அது குறித்து அறிவிக்கப்பட்டால் மட்டுமே கருத்து வெளியிடப்பட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.