குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தாய்வான் விவகாரம் தொடர்பில் அமெரிக்காவிற்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. தாய்வானின் ஜனாதிபதி Tsai Ing-wen அடுத்த மாதம் மெக்ஸிக்கோவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் அவர் அமெரிக்கா வழியாக செல்ல உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், தாய்வான் ஜனாதிபதி அமெரிக்காவின் ஊடாக பயணிப்பதனை அனுமதிக்க வேண்டாம் என சீனா கோரியுள்ளது.
தாய்வான் ஜனாதிபதி , சீனாவிடமிருந்து பிளவடைந்து தனி சுயாதீனமான நாடு ஒன்றை உருவாக்கிக் கொள்ள முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதான ஓர் பின்னணியில் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்கவோ அங்கு தங்கியிருக்கவோ அனுமதிக்கக் கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாய்வான் ஜனாதிபதிக்கு சாதகமான வகையில் அமெரிக்கா செயற்பட்டால் அது இரு நாடுகளினதும் நல்லுறவை பாதிக்கும் எனவும் சீனாவின் கொள்கைகள் தொடர்பில் அமெரிக்கா புரிந்துணர்வுடன் செயற்படும் என எதிர்பார்ப்பதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.