173
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் வெதுப்பகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தின் போது வெதுப்பகத்தின் கதவு வெளிப்புறமாக மூடப்பட்டிருந்ததால் பணியாளர்கள் வெளியே வரமுடியாமல உள்ளே இருந்து மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்க்பபட்டுள்ளது.
மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love