இந்தியமத்திய அரசின் ரூபாய் தாள் தொடர்பான அவசர சட்டத்துக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த சட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 31ம் திகதிக்கு பின்னர் பழைய 500, 1000 ரூபாய் தாள்கள் வைத்திருந்தால் சிறைத்தண்டனை இல்லை என மத்திய அரசு அவசர சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளதுடன் அபராதத்தொகையையும் குறைந்த பட்சம் 10,000 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை 50 நாட்களுக்கு மேலாகியும் ரூபாய் தாள் பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை எனத் தெரிவித்து இந்திய பிரதமர் மோடியை கண்டித்து அவருக்குத் தூக்குக் கயிறு அனுப்ப முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ரூபாய் தாள் நடவடிக்கை காரணமாக இந்தியாவில் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாட்டிற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காத் மோடி தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்தே போராட்டம் இடம்பெற்றிருந்தது