154
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்
யாழ்ப்பணத்திற்கு விஜயம் மேற்கொண்ட கனடா வெளிவிவகார அமைச்சர் ஸ்டெபன் டியான் உள்ளிட்ட குழுவினர் இன்று காலை வடமாகாண ஆளூநர் ரெஜினோல்ட் குரே மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரை சந்தித்தனர்.
இக் குழுவினர் முன்னதாக வடமாகாண ஆளுனரின் அலுவலகத்திற்கு சென்று ஆளுனரை சந்தித்த பின்னர் கைதடியில் உள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்திற்கு சென்று சந்திப்பில் ஈடுபட்டனர்.
Spread the love