இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு விசாரணையை, இந்திய உச்சநீதிமன்றம் எதிர்வரும் முதலாம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட உத்தரவுக்கு தடை விதிக்க கோரி உச்சநீதமன்றத்தில், அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான இந்திய மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது.
இவ் வழக்கு விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் வாதாட ராகேஷ் திவிவேதிக்கு பதில் யோகேஷ் கன்னா ஆஜரானார்.
மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதிக்கு உடல் நலம் சரியில்லை என நீதிபதிகளிடம் தெரிவித்த யோகேஷ் கன்னா, வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர் என இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றனர்.