அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஹிலரி கிளின்ரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் Phடையனநடிhயை இல் நடைபெற்ற கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தின் போது, முன்னாள் ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரனை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வரலாற்றில் பிரதான ஓர் அரசியல் கட்சி முதல் தடவையாக பெண் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்துள்ளது.
குடியரசு கட்சியின் டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து ஹிலரி கிளின்ரன் போட்டியிட உள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
தமது மிகச் சிறந்த நண்பரும் மனைவியுமான ஹிலரி கிளின்ரன் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவானமை மகிழ்ச்சி அளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்ரன் தெரிவித்துள்ளார்.
மிகச் சிறந்த சமூக சேவகியான ஹிலரி நாட்டில் ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்துவார் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கிளாரி கிளின்ரன் அறிவிப்பு:
162
Spread the love