கூட்டு எதிர்க்கட்சியின் பாத யாத்திரை மூன்றாவது நாளாக தொடர்கிறது
கூட்டு எதிர்க்கட்சியினரின் பாத யாத்திரை இன்று (30) மூன்றாவது நாளாக நெலும்தெனியவில் இருந்து ஆரம்பிக்கப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
கடந்த 28ம் திகதி பேராதெனியவில் இருந்து இப்பாத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.
நேற்று மாவனல்லை, உதுவன்கந்த பகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பாதயாத்திரை நெலும்தெனியவில் நிறைவடைந்தது.
இன்று நெலும்தெனியவில் இருந்து நிட்டம்புவை வரையில் இப்பாத யாத்திரை செல்லவுள்ளது.
பாத யாத்திரையை நிறுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துக் கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி கூறுகின்றார்.
இந்நிலையில் இப்பாத யாத்திரை பொது மக்களுக்காக இடம்பெறும் ஒன்றல்ல என்று அமைச்சர் கபீர் ஹாசிம் கூறுகின்றார்.