குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-
அரசாங்கம் ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சி நடத்தும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சி வகிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் முன்னதாக இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் இணைந்து செயற்படத் திட்டமிட்டிருந்தன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு இணைந்து திட்டங்களை முன்னெடுக்க இரண்டு கட்சிகளும் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பொலனறுவையில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார மற்றும் அபிவிருத்தி பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கு தேசிய அரசாங்கம் தீர்வு வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் அரசாங்கத்திற்கு ஆணை வழங்கியுள்ளதாகவும் அதனை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்துவதனால் எதுவும் நடக்காது எனவும், அரசாங்கம் இவ்வாறான போராட்டங்களினால் கவிழாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.