குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கு ஈரானியர் ஒருவர் உதவியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாய்லாந்தில் தற்போது சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈரானிய பிரஜையொருவர் இவ்வாறு உதவியதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சில ஆயிரம் டொலர்களுக்கு போலியான ஆவணங்களைத் தயாரித்து இவ்வாறு புலி உறுப்பினர்கள் தப்பிச் செல்ல உதவியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
48 வயதான ர்யஅனை சுநணய துயகயசல என்ற ஈரானிய பிரஜையே இவ்வாறு உதவியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நபர் ஒர் மருத்துவராக கடமையாற்றியிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச ரீதியான சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் குறித்த நபருக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.