நகர மண்டபப் பகுதியில் கடும் வாகன நெரிசல்:
நகர மண்டபப் பகுதியில் கடும் வாகன நெரிசல்
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் மேற்கொண்டு வரும் பாத யாத்திரை காரணமாக நகர மண்டபப் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மக்கள் போராட்ட பாத யாத்திரை, கடந்த 28ம் திகதி பேராதனை பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்தப் பாத யாத்திரையின் இறுதி நாள் இன்றாகும்.
இதன்படி, கிரிபத்கொடவில் இருந்து இன்று ஆரம்பித்த நடை பவணி, கொழும்பை அடைந்த நிலையில், லிப்டன் சுற்றுவட்டத்தில் கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியின் ஜன சட்டன பாத யாத்திரை கொழும்பின் மாளிகாவத்தயை சென்றடைந்துள்ளது.
இன்றைய தினம் காலை கிரிபத்கொட நகரிலிருந்து பாத யாத்திரை ஆரம்பமானது.
ஹைட் மைதானத்தில் கூட்டத்தை நடாத்த கூட்டு எதிர்க்கட்சியினர் திட்டமிட்டிருந்தனர்.
எனினும் திருத்தப் பணிகள் காரணமாக மைதானம் வழங்கப்படவில்லை.
கெம்பல் மைதானத்தில் கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டம் நடைபெறவுள்ளது:-
கூட்டு எதிர்க்கட்சியின் பாத யாத்திரை நிறைவில் கெம்பல் மைதானத்தில் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
கெம்பல் மைதானத்தை வழங்குவது குறித்த கடிதம் காவல்துறையினரால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் சற்று முன்னர் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக ஹைட் மைதானத்தை கூட்டு எதிர்க்கட்சியினர் ஒதுக்கியிருந்த போதிலும், திருத்தப் பணிகள் காரணமாக மைதானம் வழங்கப்படவில்லை.
கூட்டம் நடத்த மைதானம் ஒன்றை வழங்குமாறு மஹிந்த ரணிலிடம் கோரிக்கை:-
ஜன சட்டன பாத யாத்திரையின் நிறைவில் கொழும்பில் கூட்டமொன்றை நடாத்துவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி அவர் இவ்வாறு கோரிக்கை முன்வைத்துள்ளார்.
இதன் போது ஜனாதிபதியுடன் பேசியே பதில் ஒன்றை அளிக்க முடியும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்டு இது பற்றி கோரியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி, மைதானம் ஒன்றை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
காலி முகத் திடல் அல்லது கெம்பல் மைதானத்தை வழங்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த பதிலை பிரதமர் முன்னாள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.
அதன்போது காலி முகத் திடல் மைதானத்தை மஹிந்த விரும்பவில்லை எனவும் கெம்பல் மைதானத்தில் கூட்டம் நடத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.