முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு அரசாங்கம் உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்கியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசாங்கம் உத்தியோகபூர்வ இல்லங்களை வழங்க வேண்டியது அவசியமானது.
இதன் அடிப்படையில் மஹிந்தவிற்கு உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டுள்ளது.
வோர்ட் பிளேஸில் அமைந்துள்ள இந்த இல்லம் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சராக இருந்த போது பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லமே, மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லமாக உருவாகியுள்ளது.
சுமார் 30 மில்லியன் ரூபா செலவில் குறித்த இல்லம் புனரமைக்கப்பட்டுள்ளது.
தமக்கு இதுவரையில் உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.