இலங்கை அகதிகள் பிரஜாவுரிமை கோரி இந்தியாவில் போராட்டம் நடத்தியுள்ளனர்.
சுமார் 600 இலங்கை அகதிகள் இந்தியாவில் இவ்வாறு போராட்டம் நடத்தியுள்ளனர்.
பிரஜாவுரிமை வழங்குமாறு கோரி குறித்த அகதிகள் முதலமைச்சருக்கு கடிதமொன்றை ஒப்படைத்துள்ளனர்.
இந்தியாவில் வீசா காலம் முடிவடைந்ததன் பின்னர் தங்கியிருப்போருக்கான அபராதக் கட்டணம் குறைக்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அகதி முகாம்களுக்கு வெளியில் வாழ்ந்து வரும் இலங்கை அகதிகள் அபராதக் கட்டணம் ஒன்றை செலுத்த நேரிட்டுள்ளது.
வீசா இன்றி நீண்ட காலம் தங்கியிருந்த அடிப்படையில் இவ்வாறு அபராதம் அறவீடு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுமார் ஒரு லட்சம் இலங்கை அகதிகள் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அகதிகள் பிரஜாவுரிமை கோரி இந்தியாவில் போராட்டம் – குளோபல் தமிழ்ச்செய்தியாளர் :-
281
Spread the love