ஓயாமடுவவில் ஆயுதக் களஞ்சியம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது தற்காலிக அடிப்படையில் சில இடங்களில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள ஆயுதங்களை இவ்வாறு ஒரே இடத்தில் களஞ்சியப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் நாட்டின் பல இடங்களில் தற்காலிக அடிப்படையில் ஆயுதங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டன.
சனத்தொகை குறைந்த இடத்தில் சர்வதேச தரத்தில் ஆயுதக் களஞ்சியம் ஒன்றை அமைப்பதற்கு 2011ம் ஆண்டில் அப்போதைய அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
சனத்தொகை குறநை;த இடத்தில் ஆயுதங்களை களஞ்சியப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
அனுராதபுரம் ஓயாமடுவ பிரதேசத்தில் பாரியளவு களஞ்சியம் ஒன்று அமைக்கப்பட உள்ளது.
ஓயாமடுவவில் ஆயுதக் களஞ்சியம் ஒன்றை அமைக்க அனுமதி: குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு:-
155
Spread the love
previous post