161
யாழ். மாவட்ட செயகத்திற்கு அருகில் கண்டி வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் மரணமானார். புகைப்பட ஊடகவியலாளரான 68 வயதுடைய கந்தையா நவரட்ணம் என்பவரே தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்ற பேருந்து கண்டி வீதியில் சோமசுந்தரம் அவனியூ வீதியில் திரும்ப முற்பட்ட மோட்டார் சைக்கிளை மோதியதிலையே குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றது.
Spread the love