குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு:-
இந்திய அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக சீனாவின் துறைமுக நகர் அபிவிருத்தித் திட்டம் இடைநிறுத்தப்பட்டு மீளாய்வு செய்யப்பட்டது என சுகாதார அமைச்சர், அமைச்சரவை இணைப்பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின் மூல உடன்படிக்கையில் இலங்கைக்கு பாதகம் ஏற்படுத்தக்கூடிய வகையில் காணப்பட்ட அனைத்து விடயங்களும் நீக்கப்பட்டு மீளாய்வு செய்யப்பட்டு புதிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தில் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து இந்தியா விளக்கம் அளித்திருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கை இலங்கைக்கு நன்மை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.