குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-
பாத யாத்திரையின் போது கட்சியின் தலைமையகத்தின் எதிரில் கூக்குரல் எழுப்பப்பட்டிருந்தால் அது ஓர் முட்டாள்தனமான செயற்பாடாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தமது முன்னிலையில் அவ்வாறான ஓர் சம்பவம் இடம்பெறவில்லை எனவும் அவ்வாறு இடம்பெற்றிருந்தால் அதற்கு தாம் இடமளித்திருக்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில அரசியல் கட்சிகள் இதனை செய்திருக்கலாம் எனவும், சில தரப்பினர் இவ்வாறானவர்களை ஈடுபடுத்தியிருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரக் கட்சித் தலைமையகம் ஓர் மதிப்பிற்குரிய இடம் எனவும், அதற்கு நீண்ட வரலாறு காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.