இலங்கைப் படையினருக்கு மேற்குலக நாடுகளில் பயிற்சி வழங்க்பபட உள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
படையினருக்கு பயிற்சிகளை வழங்க பிரித்தானியாவும் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் ஆர்வம் காட்டுவதாகவும், தொடர்ச்சியாக அழைப்பு விடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
படையினருக்கு வெளிநாட்டு பயிற்சிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் அமெரிக்கா உட்பட்ட உலகின் பல நாடுகளில் படையினருக்கு பயிற்சிகளை பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண குடாநாட்டில் சுமார் 30 வீதமான படை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நாட்டின் பாதுகாப்பை கவனத்திற் கொண்டு உடனடியாக படையினரை விலக்கிக் கொள்ள முடியாதுஎ எனவும் குறிப்பிட்டுள்ளார்.
படை குறைப்பு குறித்த விடயத்தில் தாம் வடக்கு முதலமைச்சரின் கருத்துகளுக்கு தாம் உடன்பட வில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைப் படையினருக்கு மேற்குலக நாடுகளில் பயிற்சி – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-
148
Spread the love