குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு வெட்கம் இல்லையென்றால் நாம் என்ன செய்ய முடியும் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எப்போதும் முரண்பாடுகள் காணப்பட்டதாகவும் இதன் காரணமாக சிரேஸ்ட அரசியல்வாதி டொக்டர் எஸ்.ஏ. விக்ரமசிங்க இது கட்சியல்ல ஓர் கூட்டணி என கூறியிருந்தார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சி ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தால் அது கட்சியை பலப்படுத்த வேண்டுமே தவிர கட்சியை பிளவடையச் செய்யும் வகையில் அமைந்துவிடக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற பாத யாத்திரை நல்ல விடயம் எனவும், 3 -4 மில்லியன் மக்கள் அணி திரண்டதாக கூறப்பட்ட போதிலும் உண்மையில் 12000 பேர் மட்டுமே இணைந்து கொண்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு எதிரில் கூக்குரல் இட்ட போது மஹிந்த அருகாமையில் இருந்தார் எனவும், அதனை பார்த்துக்கொண்டிருந்த மஹிந்தவே வெட்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவருக்கு வெட்கம் இல்லையென்றால் நாம் ஒன்றும் செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.