குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன அண்மையில் சுமத்திய குற்றச்சாட்டு தொடர்பில் கருத்து வெளியிட முடியாது என இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
துறைமுக நகர் அபிவிருத்தித்திட்டம் தொடர்பில் இந்தியா அழுத்த கொடுத்தது எனவும் இதன் காரணமாகவே அபிவிருத்திப் பணிகளை இடைநிறுத்தி மீளாய்வு செய்ய நேரிட்டது எனவும் அமைச்சரவை தீர்மானங்கைள அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், டொக்டர் ராஜித சேனாரட்ன கூறியிருந்தார்.
துறைமுக நகர் அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் அப்போதைய எதிhக்கட்சித் தலைவரும் தற்போதைய பிரதமரும் குறித்த காலப்பகுதியில் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார் எனவும், இந்தியாவின் பாதுகாப்பு குறித்து கருத்து வெளியிட்டிருந்தார் எனவும் இந்திய உயர்ஸ்தானிகராலய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கரிசனையை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் புரிந்து கொண்டு செயற்படும் என எதிர்பார்ப்பதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.