குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-
மூதூர் தன்னார்வ தொண்டர் படுகொலை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பிரான்ஸின் எக்செய்ன் எகேய்ன்ஸ்ட் ஹங்கர் என்ற அமைப்பு அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக நிறுவனத்தின் 17 தன்னார்வ தொண்டர்கள் கூட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவம் இடம்பெற்று பத்து ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் குறித்த தன்னார்வ தொண்டு நிறுவனம் மீளவும் நம்பகாமன விசாரணைகளை நடத்துமாறு தற்போதைய அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
தண்டனை விதிக்கும் பாணியில் மேற்கொள்ளப்பட்ட இந்த படுகொலைகள் தொடர்பில் இதுவரையில் எவரும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.
யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படுவர் என இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அளித்த வாக்குறுதி எவ்வாறு நிறைவேற்றப்படுகின்றது என்பதனை ஏ.சீ.எப். உன்னிப்பாக அவதானித்து வருவதாக அதன் நிறைவேற்று அதிகாரி ஏநசழnஙைரந யுனெசநைரஒ தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறும் பொறிமுறையானது நம்பகான சட்ட தீர்வாக அமைய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் அது குறித்து கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.