கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
நான்கு இந்திய மீனவர்களை இவ்வாறு இலங்கைக் கடற்படையினர் மீட்டுள்ளனர்.
குறித்த மீனவர்கள் பயணம் செய்த படகு இயந்திரக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டதனால் மீனவர்களில் நடுக் கடலில் தத்தளிக்க நேரிட்டுள்ளது.
இலங்கையின் மேற்குக் கடற் பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்களும் படகும் திக்கோவிட்ட மீன்பிடித்துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் மீனவர்களுக்கு உணவும் மருத்துவ வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
படகினை பழுதுபார்த்து மீனவர்கள் மீளவும் சர்வதேச கடற்பரப்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டு விடப்படுவர் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.